மின்சார சாதனங்கள்

4 Jul 2013

தமிழ் சொற்களை அதிகமாக புழங்குவோம்

மின்சாரத்தில் இயங்கும் பொருட்களுக்கான பொதுவான
படிமம் இதோ 

1.இயந்திரம் 
2.சாதனம்
3.பொறி
4.கருவி
5.பெட்டி


(இன்னும் சுமார் 150 படிமங்கள் உள்ளன. ஆனால் நாம் முதலில் இதைப் பயன்படுத்த முயற்சிப்போம்)


பயன்படுத்துவது எவ்வாறு

பொருளின் பயன்பாடு
அதன் தன்மை அல்லது பண்பு
காரணம் ஆகியவற்றை  முன்னே
சேர்த்து கொள்ள வேண்டியது தான் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் அந்த பொருள் என்ன வேலை செய்கிறதோ அதனை முன்னால் சேர்த்துக் கொள்ளுங்கள்

படிமத்தைப் பின்னால் சேர்த்துக்கொள்ளுங்கள்


Television
படப்பெட்டி
தொலைக்காட்சி(x)
Washing Machine
சலவை இயந்திரம்

Iron Box
கணப்புப் பெட்டி
இஸ்திரிப் பெட்டி(x)
Comuter
கணிப் பொறி

Grinder
அரவை இயந்திரம்

Mixie
சிறிய அரவை இயந்திரம்




அடுத்ததாக
6. “இ”
7. “ஆன்”

என்பதை சேர்க்கும் விதம்

heater            = சூடாக்கி
fridge             = குளிர்விப்பான்
air condition  = குளிரூட்டி


இவ்வளவுதான் இந்த 7 படிமங்களே அனைத்து மின்சார சாதனங்களுக்கும் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் 150 நுண்ணிய படிமங்கள் உள்ளன. முதலில் இந்த 7 படிமத்தை பயன்படுத்த முயற்சிப்போம்.

Fan = மின்விசிறி என்று சொல்லத்தேவையில்லை
காத்தாடி என்று சொன்னால் போதுமானது

Light என்பதை விளக்கு என்று சொன்னாலே போதுமானது. மின்விளக்கு என்றும் சொல்லலாம்

இவ்வளவுதான் தமிழ்.

தமிழை பேச முடியாதவாறு கடினமாக மொழிமாற்றம் செய்வது. ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழாக்கம் செய்வதெல்லாம் ஆகாத வேலை.

தமிழை பேசுவது மிகவும் எளிது. தமிழில்
தொண்டையை அழுத்துவது
நாக்கை சுழற்றுவது
மூச்சுக் காற்றை விரயம் செய்வது போன்ற வகையில் வார்த்தைகள் இல்லை எளிமையாகவே இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
தமிழ் குடில் © 2011 | Designed by Tamilkudil